September 12, 2026
சினிமா செய்திகள்

ரஜினியின் மதிப்பு இவ்வளவுதான் – அதிர வைக்கும் கணக்கு

ரஜினி நடித்த தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. பொங்கல் விடுமுறை நாட்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட விடுமுறைநாட்கள் இருந்ததால் அந்தப்படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், ரஜினி படம்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், பொங்கல் விடுமுறை வெளியீடு ஆகிய பல விசயங்கள் இருந்தும் இப்படத்தின் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லையென்கிறார்கள்.

இப்போது வரை தமிழக திரையரங்கு வசூலில் தயாரிப்பாளரின் பங்கு சுமார் நாற்பத்தைந்திலிருந்து நாற்பத்தெட்டு கோடி வரை வரும் என்கிறார்கள். 

ஏற்கெனவே ரஜினியின் பேட்ட படமும் சுமார் ஐம்பது கோடிக்குள் மட்டுமே வசூல் செய்தது என்கிறார்கள்.

ஆக, ரஜினி படம் என்பதைத்தாண்டி கார்த்திக்சுப்புராஜ் இயக்கம், சன் பிக்சர்ஸ் வெளியீடு போன்ற அம்சங்களும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிப்பு ஆகிய கூடுதல் அம்சங்கள் இருந்துமே வசூல் இவ்வளவுதான் என்பது தெளிவாகியிருக்கிறது.

இவ்வசூலைக் கணக்கிட்டு அதற்கேற்ப செலவு செய்து படமெடுத்தால்தான் இலாபம் பார்க்கமுடியும் இல்லையென்றால் நட்டம்தான் என்கிறார்கள். 

Related Posts