அருண்பாண்டியனும் அவர் மகளும் நடிக்கும் புதியபடம்
மலையாளத்தில் குறைந்த முதலீட்டில், நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.
அந்த வரிசையில் 2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியான படம் ‘ஹெலன்’.
அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த அந்தப்படம் தந்தை மகள் பாசத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல விசயங்களைப் பேசிய படம்.
படத்தில் ஹெலனாக, ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா பென் நடித்திருந்தார். அப்பா வேடத்தில் லால் நடித்திருந்தார்.
மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற அந்தப்படத்தைத் தமிழில் எடுக்கவிருக்கிறார்களாம்.
இப்படத்தைத் தமிழில்,இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கவிருக்கிறாராம்.
மலையாளத்தில் லால் நடித்த வேடத்தில் அருண்பாண்டியனும் மகள் வேடத்தில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்திபாண்டியன் நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்தின் தமிழாக்க உரிமையை அருண்பாண்டியன் வாங்கி வைத்திருந்தாராம்.
ஜூங்கா படத்தின் வரவு செலவின் தொடர்ச்சியாக இப்பட வேலைகள் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.












