January 13, 2025
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் வெளியீடு எப்போது?

லிஃப்ட், டாடா ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் கவின் இப்போது மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவற்றில் ஒன்று, பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார்.இன்னொன்று நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம்.ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.மூன்றாவது இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் படம்.

இவற்றில், ஸ்டார் படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எழிலரசு ஸ்டார் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்டார் படத்தை பிப்ரவரி 14,2014 காதலர் தினத்தன்று வெளியிட்டுவிடவேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்துவந்தார்கள்.

ஆனால், திட்டமிட்டபடி வேலைகள் முடிவடையாததால் அப்போது வெளியிட இயலவில்லை.அதனால் படம் தாமதமாவதற்கு கவின் தான் காரணம். அவர் படப்பிடிப்புக்குச் சரியான முறையில் வர மறுக்கிறார் என்று தயாரிப்புத் தரப்பில் சொல்லப்பட்டது.

ஏற்கெனவே கவின் கொடுத்த தேதிகளை தயாரிப்பு நிறுவனம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் அடுத்தடுத்த படங்களுக்குத் தேதி கொடுத்திருக்கும் நேரத்தில் எங்கள் படத்துக்கு வாருங்கள் என்று கூப்பிடுவதாலேயே அவரால் தேதி தர இயலவில்லை என்பது கவின் தரப்பில் சொல்கிறார்கள்.

இந்த வாத பிரதிவாதங்களைத் தாண்டி, இந்தப்படத்தின் படப்பிடிப்பில் சுமார் எட்டுநாட்கள் கவின் கலந்துகொள்ள வேண்டியிருந்ததாம். அந்தப் படப்பிடிப்பை முடித்தால்தான் வேலைகள் நிறைவடையும் எனும் நிலை.

இந்த எட்டுநாட்களையும் முழுமையாகக் கொடுக்காமல் இரண்டிரண்டு நாட்களாகப் பிரித்துக் கொடுத்தாராம். அதன்படி இன்னும் இரண்டுநாட்கள் அவரை வைத்துப் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கிறதாம்.

அதை முடித்து அதற்குப் பின்னான வேலைகளையும் விரைவில் நிறைவு செய்து தருவதாக இயக்குநர் இளன் தரப்பில் உறுதி சொல்லப்பட்டிருக்கிறதாம்.

அவர் சொன்னபடி நடந்துவிட்டால், ஏப்ரல் மாதத்தில் குறிப்பாக ஏப்ரல் 12 ஆம் தேதி படத்தை வெளியிட்டுவிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறதாம்.

இன்னொருபக்கம், ஏர்கெனவே இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவாலும் சில விசயங்கள் தாமதமாகியிருக்கிறது. இப்போதும் அப்படி நடக்காமல் எல்லாம் சரியாக நடந்தால் ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகிவிடும் என்கிறார்கள்.

Related Posts