சினிமா செய்திகள்

மாநாடு படக்குழுவின் பயத்தைப் போக்கிய சிம்பு

வெங்கட்பிரபு இயக்கத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாநாடு’.
இப்படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் , பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.இப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர் ராஜா,ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், படத்தொகுப்பு பிரவீன் கே.எல்.

இப்படம் பல்வேறு தடைகளைத் தாண்டி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கப்பட்டது.சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

அதன்பின் ஐதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடர்ந்தது.கொரோனா சிக்கல் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.

இந்நிலையில் எட்டுநாட்கள் என்று தொடங்கி 21 நாட்கள் வரை நீடித்த ஊரடங்கு இப்போது மேலும் 16 நாட்கள் நீட்டிக்கப்பட்டுவிட்டது.

இதனால் மாநாடு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுடைய அதிர்ச்சிக்குக் காரணம், ஊரடங்கு நாட்கள் நீட்டிக்கப்பட்டால் சிம்பு உடல் எடை கூடிவிடுமோ? என்பதுதான்.

ஏற்கெனவே மாநாடு தொடங்குவதில் தாமதம் ஏன்? என்ற போது, சிம்பு உடல் எடைக்குறைப்பு சிகிச்சையில் இருக்கிறார் என்றும் அது முடிந்து அவர் வந்ததும் மாநாடு படம் தொடங்கும் என்றும் சொல்லப்பட்டது.

இது நடந்தது மார்ச் 2019 இல்.

இப்போது ஏப்ரல் 2020. இப்போது சிம்பு மீண்டும் எடை கூடிவிட்டால் ஊரடங்கு முடிந்தவுடன் படப்பிடிப்பைத் தொடங்க முடியாதே என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருந்தவர்களீன் பயத்தைப் போக்கும் வகையில் காணொலி ஒன்றை வெளீயிட்டிருக்கிறார் சிம்பு.

அதில் அவர் வீட்டுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறார்.வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுப்பாடாக வைத்திருக்கிறார் என்கிற செய்தி காட்சியாகவே வெளீயானதில் மாநாடு குழுவினர் நிம்மதியடைந்திருக்கின்றனர்.

Related Posts