அஜித் படத்தில் மோகன்லால் வெங்கடேஷ் – புதியதகவல்
அஜித் நடித்த குட்பேட்அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.2025 ஏப்ரல் 10 அன்று வெளியான
அந்தப்படம் தமிழ்நாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது.
குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்,அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்குவார் என்று சொல்லப்பட்டுவந்தது.அவரும் அதற்கான கதை திரைக்கதை எழுதும் பணிகளில் இருப்பதாக அவ்வப்போது சொல்லிவந்தார்.
இந்நிலையில்,ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு அந்தப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதுவரை ஏகே 64 என அழைக்கப்பட்டு வந்த அந்தப்படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அறிவிக்கப்பட்டது.
இந்தப்படத்தைத் தயாரிக்க பல்வேறு தயாரிப்பாளர்களிடம் பேசியும் அவை எதுவும் சரியாக அமையவில்லை என்பதால் அஜித்தின் மனைவி ஷாலினியே தயாரிக்கும் முடிவை எடுத்து களமிறங்கிவிட்டார்.இந்தப்படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
படத்தின் பெயர்,தயாரிப்பாள்ர்,இசையமைப்பாளர் ஆகியோருடைய பெயர்கள் மட்டும் ஆக்ஸ்ட் 3 அன்று அறிவிக்கப்பட்டது.அவைதவிர அந்தப்படம் குறித்த எந்தத்தகவலும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில்,அந்தப்படத்தை மிகப்பெரிய அளவில் அதாவது,பான் இந்தியா படமாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
அதற்கேற்ற கதையும் அமைந்திருக்கிறது என்பதால் அதைச் செயல்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.
எனவே,இந்தப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் தெலுங்கு முன்னணிநடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் ஆகியோரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இதற்காக அவர்களை அணுகி அவர்களிடம் கதை சொல்லி அவர்களுடைய சம்மதத்தையும் பெற்றுவிட்டார்களாம்.
அஜீத் படமென்பதால் சம்பள விசயத்தில் எந்தச் சிக்கலும் இருக்காது.அதேசமயம்,படப்பிடிப்பு தொடங்குகிற நாள் அதைத்தொடர்ந்து இவர்கள் நடிக்க வேண்டிய தேதிகள் சரியாக அமைந்துவிட்டால் இவர்கள் நடிப்பது உறுதி என்கிறார்கள்.கதையும் கதாபாத்திரமும் நன்றாக இருக்கிறது என்பதால் தேதிகளையும் அனுசரித்துக் கொடுத்துவிடுவார்கள்.எனவே,இந்தப்படத்தில் அவர்கள் நடிப்பது உறுதி என்கிறார்கள்.
இவர்கள் நடிப்பதால் படத்துக்குப் பலம் என்பதோடு வியாபாரத்திலும் இந்த நடிகர்களின் பங்களிப்பு பெரிய அளவில் உதவிபுரியும் என்றும் சொல்கிறார்கள்.
இதுகுறித்த அறிவிப்பை ஒப்பந்தங்கள் முறையாகக் கையெழுத்தான பின்பு வெளியிடுவார்களாம்.அதோடு,நாயகி உள்ளிட்ட படம் குறித்த ஒவ்வொரு விசயத்திலும் ஒரு வியப்பை ஏற்படுத்தி படத்தைப் பெரிதாக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.
அஜித் இரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடக்கூடிய தகவல்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.











