கார்த்தி படத்தயாரிப்பாளரை ஏமாற்றும் ஓடிடி நிறுவனம் – அதிர்ச்சித் தகவல்
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தயா்ரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான படம் சர்தார்.
இயக்குநர் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டைவேடங்களில் நடித்திருந்தார்.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர்.
இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றிருந்தது.
அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட தொகை சுமார் இருபத்தியிரண்டு கோடி என்று சொல்லப்படுகிறது.
மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் தராமல் பகுதி பகுதியாகப் பிரித்துத் தருவதாக ஆஹா நிறுவனம் சொல்லியிருக்கிறது. அதை தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டாராம்.
ஆனால் படம் வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பணத்தை முழுமையாகக் கொடுக்கவில்லையாம்.
சுமார ஏழுகோடி ரூபாயை ஆஹா நிறுவனம் தரவேண்டுமாம்.
ஒன்றுக்குப் பலமுறை அந்தப்பணத்தைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போய்விட்டாராம் தயாரிப்பாளர்.
ஆஹா நிறுவனம் அசைந்து கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இப்படி நடக்குமெனக் கொஞ்சமும் எதிர்பாராத தயாரிப்பாளர் என்ன செயவதெனத் தெரியாமல் தவிக்கிறாராம்.
ஒப்பந்தம் கையிலிருப்பதால் அதை வைத்து நீதிமன்றத்துக்குப் போகலாம் என்று பலர் சொன்ன யோசனையை செல்படுத்தவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
திரைப்படத்துறைக்குள்ளேயே இருக்கும் ஆஹா நிறுவனத்தினர் இப்படி நடந்துகொள்ளும் விசயமறிந்த தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.











