சினிமா செய்திகள்

பெரிய செலவு நல்ல வியாபாரம் – தெம்பாக களமிறங்கும் மிஸ்டர் எக்ஸ்

எப்ஐஆர் பட இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்தபடம் மிஸ்டர் எக்ஸ். இந்தப்படத்தில்ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக்,சரத்குமார்,மஞ்சுவாரியார்,அனகா,அதுல்யா ரவி, ரைஸா வில்சன்,காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார்.

ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் இராஜஸ்தான் தூத்துக்குடி குலுமணாலி மும்பை பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள் அசர்பைஜான் நாட்டிலும் படமாக்கப்பட்டுள்ளன.

சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.இலட்சுமண்குமார், மேவரிக் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள‘மிஸ்டர் எக்ஸ்’(Mr X) திரைப்படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படம், ஆர்யா,கவுதம் கார்த்திக் இயக்குநர் மனு ஆனந்த் கூட்டணியின் சந்தை மதிப்பைக் கணக்கிட்டு எடுக்கப்படவில்லை.

மனு ஆனந்த் சொன்ன கதைக்கு பெரும் பொருட்செலவு ஆகுமெனினும் கதை மற்றும் இயக்குநர் மீதான நம்பிக்கையால் பெரும் செலவு செய்து படத்தை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

அதனால், இந்தப்படத்தின் மொத்தச் செலவு சுமார் நாற்பது கோடிக்கு மேல் ஆகிவிட்டதாம்.

இப்போது இந்தப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னான இணைய ஒளிபரப்பு உரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன விற்பனை ஆகியுஇருக்கிறது.

அவ்விரண்டின் விலை சுமார் இருபத்து நான்கு கோடி என்று சொல்லப்படுகிறது.

மொத்தச் செலவில் பாதிக்கு மேல் இதிலேயே கிடைத்துவிட்டதால் தெம்பாகப் படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்.

இப்பட இயக்குநரின் முத்தைய படமான எஃப் ஐ ஆர், திரையரங்குகளிலும் நல்ல வசூல் வெற்றியைப் பெற்ற படம்.இந்தப்படமும் மாறுபட்ட கதைக்களத்தில் அனைவரும் இரசித்துப் பார்க்கும் வண்ணம் உருவாக்கப்படிருப்பதால்,மீதிப்பணத்தை தமிழ்நாடு திரையரங்க வசூலிலேயே எடுத்துவிடலாம் என்பது தயாரிப்பாளரின் திட நம்பிக்கையாக இருக்கிறது.

தமிழநாடு தவிர அண்டைமாநிலங்கள், இந்தி, வெளிநாட்டு உரிமை ஆகியன மொத்தமும் இலாபம் என்று சொல்கிறார்கள்.

இதனால் ஒட்டுமொத்தப் படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியுடன் வெளியீட்டு வேலைகளில் இறங்கியிருக்கிறது.

Related Posts