சினிமா செய்திகள்

தலைவன் இருக்கிறான் படம் – கமல் புது முடிவு

கமலுக்கு இப்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படம் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் என்கிற படத்தில் கமல் நடிக்க ஒப்பந்தம் நடந்திருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப்படம் உருவாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு இந்தப்படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன.

ஆனாலும், இந்தப்படத்தைத் தயாரிப்பதில் லைகா நிறுவனம் ஆர்வம் காட்டவில்லையாம். கமலுடன் ஒப்பந்தம் போட்டு பெரும்தொகை கொடுத்திருந்த போதும் இப்படத்தைத் தொடர அந்நிறுவனம் விரும்பவில்லை என்று சொல்கிறார்கள்.

தொடக்கத்தில் இதனால் அதிர்ச்சியடைந்த கமல், இப்போது இப்படத்தைத் தயாரிக்க யாரும் வரவில்லையென்றாலும் சிக்கலில்லை. நானே தயாரிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

கொரோனா சிக்கல் முடிவடைந்ததும் இதுகுறித்த அறிவிப்பு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

Related Posts