சினிமா செய்திகள்

ஒரு நாளைக்கு ஐம்பது இலட்சம் – விஜய்சேதுபதியின் சம்பளம் உயர்ந்தது

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிசாசு 2’. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏலகிரியில் சில காட்சிகளைப் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதற்காக திண்டுக்கல்லுக்குச் சென்றுள்ளார் விஜய் சேதுபதி.

அவர் பிசாசு 2 படத்தில் ஐந்துநாட்கள் நடிக்கவிருக்கிறாராம். இதற்காக அவர் கேட்ட சம்பளம் இரண்டரைக் கோடி என்று சொல்லப்படுகிறது.

ஒரு நாளைக்கு ஐம்பது இலட்சம் என்று கணக்குப் போட்டுக் கேட்டிருக்கிறார் என்றாலும் வேடத்தின் முக்கியத்துவம் கருதி அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பாக வெற்றிமாறன் படத்தில் பத்துநாட்கள் நடிப்பதற்காக மூன்றுகோடி சம்பளம் பெற்றார் என்று செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts