சினிமா செய்திகள்

அஜீத் பரிந்துரை – நேர் கொண்ட பார்வை வியாபாரத்தில் திடீர் திருப்பம்

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருந்தது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

இந்நிலையில் ஜூலை 31 அன்று, ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்றுவிட்டது என்று சொன்னார்கள்.

இதனால் சுமார் பத்து நாட்களாக இருந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், நேர் கொண்ட பார்வை படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ் பிக்சர்ஸ் ஜி.சீனிவாசன், கே.ராஜமன்னார் மற்றும் ராகுல் ஆகியோர் பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இவர்களில் ஜி.சீனிவாசன் மற்றும் ராஜமன்னார் ஆகியோர் பிரபல விநியோகஸ்தர்கள். நடிகர் அஜீத்தே பரிந்துரை செய்தார் என்பதால் ராகுல் என்பவருக்கு அந்த உரிமையில் பங்கு வழங்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள்.

பத்து நாட்களாகவே ஜெமினி நிறுவனமே இப்படத்தை வெளியிடும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் திடீர் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts