சினிமா செய்திகள்

இயக்குநர் ஏ.வெங்கடேஷின் நேத்ரா படத்தை வெளியிடுகிறார் நடிகர் தியாகராஜன்

விஜய், சிம்பு, சரத்குமார்,அர்ஜூன் உட்பட பல நாயகர்களின் படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தற்போது கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’.

கனடா வாழ் தமிழர் பரராஜசிங்கம் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வினய்யும், தமனும் நாயகர்களாக நடிக்கின்றனர். நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார்.முக்கிய வேடத்தில் ரித்விகா, ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஜெயப்பிரகாஷ், இசை ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு என்.கணேஷ்குமார், வசனம் அஜயன்பாலா,

இந்தப் படம் ஆக்சன், திரில்லர் கலந்த கதைதான். கூடுதலாகக் காதலும் சேர்ந்து கொள்ள.. இந்தக் காலத்திய இளைஞர்களுக்குப் பிடித்தமான திரைக்கதையில், தெரிந்த சம்பவங்களில் மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், வித்தியாசமான நகைச்சுவைக்கு இந்த முறை இமான் அண்ணாச்சியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கை கோர்த்திருக்கிறார்.

ரோபோ சங்கர் வேட்டையாடு விளையாடு கமல், சிங்கம் சூர்யா ஆகியவை உட்பட ஐந்து கெட்டப்களில் நடித்திருக்கிறாராம்.

பிப்ரவரி 8,2019 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா சனவரி 26,2019 அன்று நடைபெற்றது.

விழாவில்,படத்தின் நாயகி சுபிக்‌ஷா,ரித்விகா, தமன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தம்பிராமையா ஆகியோரோடு சிறப்பு விருந்தினர்களாக சரத்குமார், கே.பாக்யராஜ், நமீதா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றுள்ளார்.

இதுவரை தாம் தயாரித்து இயக்கிய படங்கள் மற்றும் தன் மகன் பிரசாந்த் நடித்துள்ள படங்களை மட்டுமே வெளியிட்டுள்ள தியாகராஜன், முதன் முறையாக இன்னொரு இயக்குநரின் படத்தை வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனாலேயே இந்தப்படம் வெளியிடுமுன்பே வெற்றி பெற்ற படம் என்று எல்லோரும் பாராட்டினர்.

Related Posts