சினிமா செய்திகள்

திட்டித் தீர்க்கும் ரஜினி விஜய் ரசிகர்கள் மனம் நொந்த இயக்குநர்

அண்மையில் மு.களஞ்சியம் இயக்கத்தில் உருவான ‘முந்திரிக்காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சிபிஐ கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், இயக்குநர் ராஜுமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும் போது, “இந்தப் படத்தின் நாயகன் புகழ் எங்க பிள்ளை. சீமான் அண்ணனுக்கு ஒரு வேண்டுகோள். யார் யாரோ சூப்பர் ஸ்டார், இளைய தளபதி எல்லாம் இருக்கும் போது நம்ம பிள்ளைக்கு ஒரு பட்டம் வைத்துவிடுங்கள். ஒரு இடதுசாரி தகப்பன் வளர்க்கும் பிள்ளை எப்படியிருப்பான் என்பதற்கு புகழ் ஒரு உதாரணம். அவன் திரைப்படத்தை மிகத்தீவிரமாக நேசிக்கக் கூடியவன். நிச்சயம் புகழ்மிக்க நடிகனாக அவன் மாறுவான் என்று பேசினார் இயக்குநர் ராஜுமுருகன்.

இந்தப் பேச்சு காரணமாக ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து இயக்குநர் ராஜுமுருகனை கடுமையாகச் சாடினார்கள். அவரது பேச்சை ட்விட்டர் வீடியோவாக வெளியிட்டு காட்டமாக ட்வீட் செய்தனர்.

அதிலும் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆபாசமாகத் திட்டித்தீர்த்தார்களாம். இதனால் மனம் நொந்த இயக்குநர் ராஜுமுருகன் தனது ட்விட்டர் பதிவில், “ஒரு இசை வெளியீட்டு நிகழ்வில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் உற்சாகப்படுத்துவதற்காக பேசப்பட்ட விசயம் அது. வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன்.

ரஜினி அவர்களும், விஜய் அவர்களும் தங்களது உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ் சினிமாவின் இந்த உச்சங்களைத் தொட்டவர்கள்.கலைத்துறையில் அவர்களது பங்களிப்பின் மேல் உயர்ந்த மரியாதை எப்போதும் எனக்கிருக்கிறது!

இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார்.

அதன் பின்னூட்டத்திலும் வந்து அவரைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Related Posts