சினிமா செய்திகள் நடிகை

அமலாபால் பற்றி திடீர் சர்ச்சை

அண்மையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 27) சமூக வலைதளங்களில்
நடிகர் விஷ்ணு விஷால் விரைவில் நடிகை அமலாபாலை திருமணம் செய்யவுள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று நினைத்து பலர் வாழ்த்தும் தெரிவித்தனர்.

இச் செய்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், என்ன ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எதுவும் எழுதாதீர்கள் என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

இதனால் இது வெறும் வதந்தி என்று உடனடியாக உறுதியாகிவிட்டது.

Related Posts