சினிமா செய்திகள்

பாகிஸ்தானில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.ஓ படம் தமிழின் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 600 கோடி செலவில் எடுக்கப்பட்டிருக்கும் முதல் படம்.

இதுவே ஒரு சாதனை என்று சொல்கிறார்கள். இதோடு மேலும் ஒரு சாதனையை இப்படம் நிகழ்த்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படம் பாகிஸ்தானிலும் வெளியாகவிருக்கிறதாம். பாகிஸ்தானில் இப்படத்தின் இந்திப்பதிப்பு வெளியாவது இயல்பான செய்திதான். ஏனேலி நிறைய இந்திப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகிக் கொண்டுதானிருக்கிறது.

ஆனால் இந்தப்படத்தின் தமிழ்ப்பதிப்பையே அங்கு வெளியிடவிருக்கிறார்களாம்.

இந்தியில் இப்படத்தை வெளியிடும் கரன் ஜோகர் நிறுவனத்திடம், இப்படத்தின் தமிழ்ப்பதிப்பும் வேண்டும் என்றும் பாகிஸ்தான் விநியோகஸ்தரிடமிருந்து கோரிக்கை வந்ததாம்.

இதனால் வியப்படைந்த கரன் ஜோகர் லைகா நிறுவனத்திடம் கேட்டு தமிழ்ப்பிரதிகளை வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதன்மூலம் பாகிஸ்தானில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்கிற பெருமையை இப்படம் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts