சினிமா செய்திகள் நடிகர்

மும்பை செல்லாத ரஜினி ஐதராபாத் சென்றது எப்படி?

நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ரஜினியின் 2.ஓ படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக நவம்பர் 26 அன்று ஐதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

இதில் ரஜினி, அக்‌ஷய்குமார், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கலந்துகொள்ளவில்லை.

ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் அவர் கலந்துகொண்டது எப்படி?

இந்தப்படத்தை ஆந்திராவில் வெளியிடும் உரிமையை பிரபல விநியோகஸ்தர் எல்.வி.பிரசாத் பெற்றிருக்கிறாராம்.

தெலுங்கின் பெரிய கதாநாயகர்களின் படங்களின் விலை அளவு இந்தப்படத்தின் விநியோகத்துக்கு விலை கொடுத்திருக்கிறாராம் அவர்.

சுமார் எழுபது கோடி கொடுத்து ஆந்திர விநியோக உரிமையை அவர் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அவர் ரஜினியிடம் ,இந்தப்படத்தைப் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன், எனவே நீங்கள் வந்து படம் பற்றிப் பேசினால்தான் வசூல் எடுக்க முடியும் என்று கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனாலேயே ரஜினி ஐதராபாத் சென்றார் என்று சொல்கிறார்கள்.

Related Posts