சினிமா செய்திகள்

பட்டாஸ் பற்றி 4 விசயங்கள் – தனுஷ் பகிர்வு

2020 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 16 அன்று வெளியாகவிருக்கும் படம் பட்டாஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.


இந்தப்படத்தை விளம்பரப்படுத்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார்.


அப்போது அவர் பட்டாஸ் படம் பற்றியும் தனிப்பட்ட முறையிலும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.


அவற்றிலிருந்து சில….


பட்டாஸ் படத்தில் முதன்முறையாக அப்பா மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறேன்.


ரொம்ப வருடங்களுக்குப் பிறகு துறுதுறுவென இருந்து சேட்டைகள் செய்யும் வேடத்தில் நடித்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


இந்தப்படத்தில் மகன் வேடத்தின் பெயர் பட்டாஸ். 
தமிழகத்தின் தற்காப்புக்கலைகளில் மிகவும் பழமையான அடிமுறை என்கிற கலை இந்தப்படத்தில் இடம்பெறுகிறது. அவை பற்றிய காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன.


இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் இரண்டு எனக்கு மிகவும் பிடிக்கும். ஒன்று ச்சில் ப்ரோ, இன்னொன்று மவனே. இந்தப்பாடல் வரிகள் எனக்குப் பிடித்தவை.


படத்தைத் தாண்டி 2020 இல் நன்றி சொல்ல நினைக்கும் நான்கு பேர் பற்றிச் சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டதற்கு….


முதலில் என் ரசிகர்களுக்கு நன்றி. வெற்றி வரும்போது எல்லோரும் உற்சாகமாக இருப்பதௌ இயல்பு. ஆனால் எனக்கு தோல்வி வந்த நேரத்திலும் நாங்க இருக்கோம் என்று எனக்கு தெம்பு கொடுத்தவர்கள் என் ரசிகர்கள். அவர்கள்தாம் என் உந்துசக்தி. அவர்களுக்கு என் முதல்நன்றி. இவ்வாண்டு என்னுடைய மூன்று படங்கள் வரவிருக்கின்றன. எல்லாம் அவர்களுக்குப் பிடித்த மாதிரி அமையும் என நம்புகிறேன்.


இரண்டாவது மூன்றாவதாக என் மகன்கள், யாத்ரா,லிங்கா ஆகியோர். அவர்களும் என் உந்துசக்திகள்தாம். 


அடுத்து நன்றி சொல்ல வேண்டியதில்லை என்றாலும் சொல்கிறேன். என் அம்மாவுக்கு மிக்க நன்றி.


இவ்வாறு தனுஷ் கூறினார். 

Related Posts