ஒரு வருட அஜீத் 82 நாள் விஜய் – சன் டிவி அதிரடி
தீபாவளியை முன்னிட்டு 2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் விஜய் நடித்த பிகில். வெளியாகி இன்னும் நூறு நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு சனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.
அடுத்த நாள் சனவரி 16 அன்று மாலை 6.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. இப்படம் 2019 செப்டம்பர் 27 அன்று வெளியானது.
சனவரி 17 ஆம் தேதி மாலை 6.30 க்கு விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. இப்படம் 2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியானது. படம் வெளியாகி இரண்டு மாதங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.
சனவரி 18 ஆம் தேதி அஜீத் நடித்த விஸ்வாசம் படமும் சனவரி 19 ஆம் தேதி ரஜினி நடித்த பேட்ட படமும் ஒளிபரப்பாகவிருக்கின்றன.
இவை இரண்டும் 2019 பொங்கல் நாளில் திரைக்கு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
2020 பொங்கலையொட்டிய சன் தொலைக்காட்சியின் இந்த அதிரடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.











