தீபாவளியை முன்னிட்டு 2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் விஜய் நடித்த பிகில். வெளியாகி இன்னும் நூறு நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு சனவரி 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அப்படம் சன் தொலைக்காட்சியில்
பாரதிராஜாவின் பேரன், அர்ச்சனாவின் மகன், ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என முழுக்க முழுக்க உறவுகளை நேசிக்கும் குடும்பப் பொறுப்புள்ள இளைஞன் சிவகார்த்திகேயன். தந்தை இல்லாமல் தாய் மற்றும் தாத்தாவால் வளர்க்கப்படுகிறார். அவருடைய பெரியப்பா வேலராமமூர்த்தி,சித்தப்பா பஞ்சு சுப்பு உள்ளிட்டோர் அவருக்கு எதிர்ப்பு. இந்தச் சூழலில், தங்கை திருமணம் அதனால் வரும் சிக்கல்கள் அதிலிருந்து அவர்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாகத் திகழ்வது சன் பிக்சர்ஸ். மிகப்பெரிய படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்திருக்கிறது. அப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் மாற்றம் நடந்துள்ளது. முதலில் சன் பிக்சர்ஸ்
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. இப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்காட்சியொன்றின் படப்பிடிப்பு நேற்று இராமேஸ்வரத்தில் தொடங்கியிருக்கிறது. மூன்று அல்லது நான்கு நாட்களில் அது நிறைவு பெறும் என்றும் அதோடு படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள்.















