வெற்றிமாறன் எப்போது விடுவார்? – தவிக்கும் படக்குழு
வெற்றிமாறன் இயக்கிய படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர்,நடிகர் கருணாஸின் மகன் கென்கருணாஸ் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன்,விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் இவரை நடிக்க வைத்திருந்தார் வெற்றிமாறன்.
அவற்றிற்குப் பின் இவர் நாயகனாக நடித்து இயக்கிய படம் யூத்.இந்தப்படம்,இவ்வாண்டு மார்ச் 19 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.முதல்நாளிலிருந்தே,இரசிகர்கள் மற்றும் திரைஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுகளைப் பெற்ற இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
முதல்படம் பெரிய வெற்றி என்றதும் கென்கருணாஸை கதாநாயகனாக வைத்துப் படம் எடுக்க பலர் முன்வந்தனர்.அவை எதையும் அவர் ஏற்கவில்லை,அவருடைய திரையுலக குருநாதர் வெற்றிமாறன் கூப்பிட்டார் என்பதற்காக அவர் இயக்கும் ராஜன் வகையறா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படம் நடக்கும்போதே மும்பையைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம்,கென் கருணாசை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறது.அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு அந்தப்படத்தை இயக்கவிருக்கிறார்.
இதற்கான ஒப்பந்தம் ஜூலை மாதம் கையெழுத்தானது என்று சொல்லப்பட்டது.அப்போதே,இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கலாம் என்று பேசினார்களாம்.அதற்குள் ராஜன் வகையறா படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும்,நான் இந்தப்படத்துக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தாராம் கென்.
இப்போது,டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்றெண்ணி கென்னிடம் தேதிகள் கேட்டிருக்கின்றனர்.அவரோ,இன்னும் ராஜன் வகையறா முடியவில்லை,அது முடிந்ததும் வருகிறேன் என்றாராம்.அது எப்போது முடியும்? என்று கேட்டால்,எனக்குத் தெரியாது என்று சொல்லியிருக்கிறார்.சரி,இயக்குநரிடம் கேட்டுச் சொல்லுங்கள்,அதற்கேற்ப நம் படப்பிடிப்பைத் திட்டமிடலாம் என்று சொல்லியிருக்கின்றனர்.
அதற்கு,அய்யய்யோ என்னால் இயக்குநரிடம் அப்படியெல்லாம் கேட்கமுடியாது,அவர் எப்போது முடிக்கிறாரோ முடிக்கட்டும் அதன்பின் உங்கள் படத்துக்கு வருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் கென்.
இதுகுறித்து வெளியில் விசாரித்துப் பார்த்தால் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறதாம்.
இதனால் திடுக்கிட்டுப் போனாலும் வேறுவழியின்றி பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம்.
அதற்குள்ளாவது ராஜன் வகையறா படப்பிடிப்பை முடித்து கென் கருணாசை அனுப்பி வைப்பாரா? என்று படபடப்புடன் காத்திருக்கிறார்கள்.
வெற்றிமாறன் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ?












