சிவகார்த்திகேயன் படத்தில் நடந்த மாற்றம் – பெரிய பட தயாரிப்பாளர்களுக்குப் பாடம்
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை.
இப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் பாடல்காட்சியொன்றின் படப்பிடிப்பு நேற்று இராமேஸ்வரத்தில் தொடங்கியிருக்கிறது.
மூன்று அல்லது நான்கு நாட்களில் அது நிறைவு பெறும் என்றும் அதோடு படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடையும் என்றும் சொல்கிறார்கள்.
இதில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விசயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது என்ன?
இப்பாடல் காட்சியைப் படமாக்க இயக்குநர் தேர்வு செய்து வைத்திருந்த இடம் ராஜஸ்தான் மாநிலம். அங்கே போய் படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்களை இறுதி செய்துவிட்டு வந்தனராம்.
அதன்பின் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்தினால் ஆகக் கூடிய செலவுக் கணக்கைப் பார்த்துவிட்டு, இதற்காக இவ்வளவு தொகை செலவிடுவது அதிகம், எனவே மாற்றுவழியை யோசியுங்கள் என்று சொல்லிவிட்டதாம்.
எனவே இப்பாடல் காட்சி இராமேஸ்வரத்தில் படமாக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.
எல்லாப் பெரிய படங்களின் தயாரிப்பாளர்களும் இதைக் கடைபிடித்தால் நல்லது என்கிறார்கள்.











