சினிமா செய்திகள் நடிகர்

காலா படப்பிடிப்பில் ரஜினி பயந்தது எதற்காக?

ஒரு நடிகராக ரஜினி எல்லாவித வேடங்களையும் செய்திருக்கிறார். சண்டை, நடனம் என்று எல்லாவற்றையும் சரியாகவே செய்திருக்கிறார்.

ஆனால், காலா படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் பயந்த நிகழ்வும் நடந்திருக்கிறது.

படத்தில், ரஜினியின் திருமணநாள் கொண்டாட்டம் நடக்கும். அப்போது, வாடி என் தங்கச்சிலை என்கிற பாடல் இடம்பெற்றது.

திருமணநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டம் என்பதால், ரஜினி வேட்டி கட்டிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் சொல்லியிருக்கிறார்.

ரஜினி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். வேட்டி கட்டிக்கொண்டு நடனம் ஆடவியலாது என்று சொல்லிவிட்டாராம். ரஞ்சித் எவ்வளவோ வற்புறுத்தியும் ரஜினி அதற்குச் சம்மதிக்காமல், கோட் சூட்டை தேர்வு செய்தாராம்.

படத்தில் அந்தக் கொண்டாட்டம் முடிந்தபின் ரஜினியை காவல்துறை அதிரடியாகக் கைது செய்து அழைத்துச் செல்லும்,கூட்டிப்போய் அடிப்பார்கள், அப்போது வேட்டியை உருவுகிற மாதிரி காட்சி வைத்துவிட்டால் என்ன செய்வது? என்று ரஜினி யோசித்திருக்கலாம்.

Related Posts