சினிமா செய்திகள் நடிகர்

விஸ்வாசம் படத்துக்கு அடுத்து அஜீத் பட இயக்குநர் இவர்தான்

விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் `விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

இந்நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை `சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

`சதுரங்க வேட்டை’ படத்தை முடித்த வினோத், அப்போதே அஜித்திடம் ஒரு கதை கூறியிருக்கிறாராம். அஜித்துக்கு கதை பிடித்துப் போக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்பே இருவரும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தினர்.

இந்நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று பட வெளியீட்டுக்குப் பிறகு அஜித், வினோத்தை அழைத்துப் பேசினாராம். அதில் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருப்பதாகவும், விஸ்வாசம் படத்தை முடித்த பிறகு அஜித், வினோத் இயக்கத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Related Posts