செய்திக் குறிப்புகள்

சந்தானம் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம்

2016 ஜூலை 7 ஆம் தேதி ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு படம் வெளியானது.

இப்படத்தின் இரண்டாம்பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்கள். அதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து இன்று படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார்கள்.

ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் சார்பில், சந்தானம் தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று (மார்ச் 1,2018) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் நாயகன் சந்தானம்,நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி, இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

Related Posts