கவின் படத்தில் எஸ்.ஜே.சூர்யா

நடிகர் கவின், இளன் இயக்கும் ஸ்டார் மற்றும் நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவற்றில் ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முழுமையடைந்துவிட்டதாகவும் பிப்ரவரி 14,2024 அன்று அப்படத்தை வெளியிடத்திட்டமிட்டு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அண்மையில் இப்படத்தின் புகைப்படத் தொகுப்பு காணொலி வெளியானது. அதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று ஸ்டார் படத்தின் முதல்பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை என்கிறார்கள்.
இந்நிலையில், புதியபடத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார் கவின்.
அவருடைய நீண்டகால நண்பரான இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் அந்தப்புதிய படத்தை சிவபாலன் எனும் புதியவர் இயக்குகிறார். இவர் இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
புதிய இயக்குநர் படமென்றாலும் நாயகன் கவினின் சந்தைமதிப்பைத் தாண்டி பெரிய அளவில் இப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
கதாநாயகியாக முன்னணி நடிகை நடிக்கிறார்,வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
கவின், எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் கலந்துகொண்டு நடித்த படப்பிடிப்பு மைசூரில் நடந்திருக்கிறது.
சிம்புவின் மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா இருந்தார். அது மிகப்பெரிய வெற்றிப்படமானது.குறைந்திருந்த சிம்புவின் மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியது. அதன்பின், சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா நடித்த டான் படம் மிகப்பெரிய வசூலைப் பெற்று வெற்றி பெற்றது. விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி பெரியவெற்றி பெற்றது.
அண்மையில் கூட எஸ்.ஜே.சூர்யா நடித்ததால் ராகவாலாரன்ஸ் கார்த்திக்சுப்புராஜ் ஆகியோர் இணைந்த ஜிகர்தண்டா 2 படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படி எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்த நாயகர்கள் எல்லாம் பெருமதிப்பைப் பெற்றுள்ள நேரத்தில் கவின் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் நாயகன் கவினைவிட எஸ்.ஜே.சூர்யா சம்பளம் அதிகம். ஆனால் இந்தப்படம் வெளிவந்தபின் அவரைவிட அதிகச் சம்பளம் வாங்குமிடத்துக்குக் கவின் செல்வார் என்கிறார்கள்.
நடக்கட்டும்.