September 17, 2026
சினிமா செய்திகள் நடிகை

சிவாஜி பேரனுடன் திருமணமா? நடிகை சுஜா மறுப்பு

பல ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சுஜா வருணிக்கு கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும்புகழ் கொடுத்தது. அதன்பின் அவர் அனைவராலும் கவனிக்கத்தக்க நடிகையாகிவிட்டார். தற்போது அவர் நடித்துள்ள வா டீல், இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்கள் திரைக்கு வரவுள்ளன.

இவருக்கும் சிங்கக்குட்டி புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்துபோகும் போன்ற படங்களில் நடித்துள்ள சிவாஜிதேவ்க்கும் காதல் மலர்ந்திருப்பதாக ஒரு செய்தி உள்ளது.

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் சிவாஜிதேவ்வுடன் சுஜா திருப்பதி சென்றார். அங்கு அதிகாலையில் நடந்த சுப்ரபாத பூஜையில் இருவரும் கலந்துகொண்டு சாமி கும்பிட்டனர்.

இருவரும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஜாவே வெளியிட்டுள்ளார்.அதில் சிவாஜிதேவ்வும் சுஜாவும் அருகருகில் நின்றபடி போஸ் தந்திருக்கின்றனர்.

இப்புகைப்படம் வெளியானதும், நடிகர் சிவாஜிதேவ், நடிகை சுஜா ஜோடிக்கு விரைவில் திருமணம் என்று செய்திகள் வந்தன.

இதை சுஜா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, நான் இப்போதைக்கு இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏதாவது செய்தி இருந்தால் நானே உங்களுக்குச் சொல்வேன், அதுவரை நீங்களே எதையாவது எழுதாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

Related Posts