ஜோதிகா கீர்த்திசுரேஷ் படங்கள் குறித்த புதிய அறிவிப்பு
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’.
இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் ‘வா செல்லம்’,’கலைகிறதே கனவே’ ஆகிய பாடல்கள் வெளீயாகியிருக்கின்றன.
இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல், புதுமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பெண்குயின். கீர்த்திசுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு கார்த்திக் பழனி,படத்தொகுப்பு அனில் க்ரிஷ்.
இந்தப்படமும் நேரடியாக இணையதளத்தில் வெளியாகவுள்ளது.
ஜோதிகா படம் மே 29 ஆம் தேதியும் கீர்த்திசுரேஷ் படம் ஜூன் 19 ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.











