பெண் குயின் படத்தை போதுமான அளவுக்குத் திட்டித் தீர்த்துவிட்டாகி் விட்டது. இருந்த போதும் திரில்லர் என்ற வகைமையைப் பற்றி தமிழ் சினிமாவில் இருக்கும் புரிதல் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. திரில்லர் படங்களின் அடிப்படை அடுத்து என்ன வரப் போகிறதோ என்ற பதைப்புடன் சீட் நுனியில் பார்வையாளர்களை
அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ‘பிங்க்’ இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குலாபோ சிதாபோ’ இந்தித் திரைப்படம்,திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. அதேபோல் சூர்யா தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள்,கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் ஆகிய படங்களும் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கின்றன.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃபிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தில் இயக்குநர்களும், நடிகர்களுமான பாக்கியராஜ், பார்த்திபன் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.














