சினிமா செய்திகள்

கெளதம்கார்த்திக்கின் புதியபடம்

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம் ஆகிய ஐந்து படங்களை இயக்கியிருக்கும் முத்தையா, அடுத்து விஷால் அல்லது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் அவ்விருவரையும் வைத்து எடுக்கவேண்டிய படங்கள் தள்ளிக் கொண்டே போவதால் உடனடியாக கெளதம்கார்த்திக்கை வைத்து புதிய படமென்றைத் தொடங்கவிருக்கிறாராம்.

இப்படத்தைத் தயாரிக்க குற்றம் 23, தடம் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளரும் நடிகருமான இந்தர்குமார் முன்வந்திருக்கிறாராம்.

கொடிவீரன் படத்தில் நடிக்கும்போது இயக்குநருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்தப்படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே முத்தையா கெளதம்கார்த்திக் ஆகியோர் தேவராட்டம் படத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts