விஷாலுக்குத் திருமணம் ஆனா பொண்ணு இது இல்ல
நடிகர் விஷால் நடிகர் அரத்குமாரின் மகள் வரலட்சுமியைத் திருமணம் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் அவரைத் திருமணம் செய்யப்போகிறார் என்றும் செய்தி வெளியானது.
அனிஷா ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் அனிஷா என்றும், அனிஷாவின் புகைப்படம் இதுதான் என்றும் தெலுங்கு இணையதளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது.
அந்தப்புகைப்படத்தை இணைத்து விஷால் தரப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்தப் படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளி வந்து பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும்.
முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்கிரோம்.
இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.











