சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடந்த அதிரடி மாற்றம்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாகத் திகழ்வது சன் பிக்சர்ஸ்.
மிகப்பெரிய படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்திருக்கிறது.
அப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் மாற்றம் நடந்துள்ளது.
முதலில் சன் பிக்சர்ஸ் பொறுப்பாளராக இருந்தவர் சக்சேனா.
அவர் வெளியேற்றப்பட்ட பின்பு அதற்குப் பொறுப்பாளராக வந்தவர் செம்பியன். இவர் மறைந்த தயாரிப்பாளர் கோவை செழியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சன் பிக்சர்ஸ் நிர்வாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.
அவரே விலகிக் கொண்டார் என்றும் தகவல் இருக்கிறது.
மொத்தத்தில் இப்போது அவர் இல்லை.
அவருக்குப் பதிலாக சாந்தி என்பவர் பொறுப்பேற்றிருக்கிறாராம். இவர் கலாநிதிமாறன் மனைவி காவேரியின் நம்பிக்கைக்குரியவர் என்று சொல்லப்படுகிறது .











