காப்பான் உரிமையைக் கைப்பற்றியது பிரபல நிறுவனம்
சூர்யா, சாயிஷா,ஆர்யா,மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் காப்பான்.
கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படம் இம்மாதம் (செப்டம்பர்) இருபதாம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன என்றும் அதனால் தமிழக விநியோகஸ்தர்களை முடிவு செய்வதில் இழுபறி இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.
அவற்றைக் கடந்து இப்போது தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை,தமிழ்த்திரையுலகின் பிரபல நிதியாளர் மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுவிட்டதாம்.
தமிழக திரையரங்கு உரிமைக்காக கோபுரம் பிலிம்ஸ் இருபது கோடி கொடுத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இப்போது வரை இத்தகவல் அதிகாரப்பூர்வமற்றதாகவே இருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவ்ப்பு வெளியாகும் என்றும் சொல்கிறார்கள்.











