சினிமா செய்திகள்

தணிக்கைக்குழு கொடுத்த வெட்டுகள் – மாஸ்டர் படக்குழுவின் முடிவென்ன?

2021 சனவரி 13 அன்று விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தணிக்கை டிசம்பர் 18 அன்று நடந்திருக்கிறது.

படம் பார்த்த தணிக்கைக்குழுவினர், படத்தில் ஒன்பது இடங்களில் வெட்டு கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதை ஒப்புக்கொண்டால் யு சான்றிதழ் கொடுப்பதாகவும் இல்லையெனில் யு ஏ சான்றிதழ் கொடுக்கப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

இதுகுறித்து படக்குழுவினர் எடுக்கும் முடிவைப் பொறுத்து சான்றிதழ் இருக்கும் என்கிறார்கள்.

சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் படத்தை டிசம்பர் 18 ஆம் தேதியே தணிக்கைக்குழுவுக்கு அனுப்பியதற்கும் காரணம் இருக்கிறதாம். 

வெளிநாடுகளில் தணிக்கை செய்ய பத்து வேலைநாட்கள் தேவையாம்.ஆண்டுக்கடைசியில் கிறித்துப் பிறப்பு விடுமுறை காரணமாக நிறைய விடுமுறை நாட்கள் வருவதால் இங்கு முன்கூட்டியே தணிக்கை செய்திருக்கிறார்களாம்..இங்கு தணிக்கை செய்யப்பட்ட பின்புதான் அங்கு அனுப்பமுடியும் என்பதால் முன்னதாகவே இங்கு தணிக்கை நடந்திருக்கிறது.

Related Posts