September 12, 2026
சினிமா செய்திகள்

சிம்புவின் ஈஸ்வரன் – தமிழக உரிமை விலை இவ்வளவா?

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால்,பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன்.

இப்படம் 2021 பொங்கலையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக திரையரங்குகள் வெளியீட்டு உரிமையை செவன்ஜி சிவா எனும் விநியோகஸ்தர் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்காகத் தயாரிப்பாளருக்குக் கொடுக்கப்படவிருக்கும் தொகை ஏழு கோடியே பத்து இலட்சம் என்று சொல்கிறார்கள்.

முன் தொகையாக மூன்று கோடி கொடுத்து ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் மீதித் தொகை பட வெளியீட்டின்போது கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

விநியோகஸ்தர் செவன் ஜி சிவா விநியோக உரிமையைப் பெற்றிருந்தாலும் ராக்போர்ட் எண்டெயின்மெண்ட் நிறுவனம் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மாஸ்டர் படம் மட்டுமே வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்போது ஈஸ்வரன் படமும் வெளிவரவிருப்பதால் திரையரங்கினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts