சினிமா செய்திகள்

மெர்க்குரி பட ரிலீஸ் பற்றி புதிய அறிவிப்பு

டிஜிட்டல் அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து தமிழ்த் திரைப்படப் தயாரிப்பாளர்கள் மார்ச் 1,2018 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்றும் ‘பெப்சி’ அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.

ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் கட்டுக்கோப்பாக-ஒற்றுமையுடன் நடத்தி வரும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம், திரையுலகின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருக்கும் ‘மெர்க்குரி’ படம்,தயாரிப்பாளர்களின் போராட்டத்தை மீறி, ஏப்ரல் 13-ந்தேதி திரைக்கு வரும் என்றும் தகவல் வெளியானது.

உடனே, கார்த்திக் சுப்புராஜுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அதனால், ‘மெர்க்குரி’ படத்தின் டிரைலர் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியாவதை கார்த்திக் சுப்புராஜ் இரத்துசெய்தார். அத்துடன், தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாக அவர் அறிவித்தார்.

அதோடு, தயாரிப்பாளர்களின் போராட்டத்துக்கு ‘மெர்க்குரி’ படக்குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் போல் எங்களுக்கும் திரையுலகின் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. எனவே தயாரிப்பாளர்களின் போராட்டம் முடியும் வரை, ‘மெர்க்குரி’ படத்தின் தமிழ்ப் பதிப்பு வெளிவராது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9,2018) மாலை வெளியானது. அதில், இப்படம் உலகம் முழுக்க ஏப்ரல் 13 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து தமிழகம் தவிர உலகம் முழுக்க அப்படம் வெளியாவது உறுதியாகியிருக்கிறது.

Related Posts