முதன்முறை நூறு கோடியைத் தொட்ட விஜய் – ஆச்சரிய தகவல்

தமிழ் நடிகர்களில் அதிகச் சம்பளம் வாங்குபவராக ரஜினிகாந்த் இருக்கிறார். அவருடைய படங்களால் நட்டம் ஏற்பட்டபோதும் சம்பளம் குறையவில்லை.
ரஜினிகாந்த், தர்பார் படத்துக்காக நூறு கோடி சம்பளம் வாங்கினார் என்று சொல்லப்படுகிறது.
இப்போது அந்த இடத்தை விஜய் பிடித்துவிட்டார் என்கிறார்கள். விஜய் இப்போது மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கடுத்து அவர் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறதாம்.
இந்தப்படத்தில் விஜய்யின் சம்பளம் நூறு கோடி என்கிறார்கள். முதன்முறையாக விஜய் இந்தச் சம்பளம் வாங்கவிருக்கிறாராம்.
விஜய் படங்களின் வியாபாரம் உலக அளவில் சுமார் இருநூற்றைம்பது கோடி அளவில் இருக்கிறதென்றும் அதனால் அவருக்கு நூறு கோடி கொடுத்தாலும் தயாரிப்பாளருக்கு இலாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
இப்படித்தான் ரஜினிக்கும் சொன்னாங்க, ஆனால் அவரை வைத்து 2.ஓ, தர்பார் ஆகிய படங்களைத் தயாரித்த லைகா நிறுவனம் பெரும் நட்டத்தைச் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.