சினிமா செய்திகள்

ரஜினி 173 பட இயக்குநர் மாற்றமா? – உண்மை என்ன?

ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தின் இயக்குநர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அதனைத் தயாரிக்கும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்,‘ரஜினி 173’ படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173 ஆவது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்குவார் என அறிவிக்கப்பட்ட இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென கமல் ரஜினி ஆகியோரிடம் சொல்லாமலேலே விலகினார் சுந்தர்.சி.

இதனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.இப்படத்துக்காக தொடர்ச்சியாக கதைகள் கேட்கும் படலத்தில் ராஜ்கமல் நிறுவனமும், ரஜினியும் ஈடுபட்டனர்.

ரஜினியின் 173 ஆவது படத்துக்காக, ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து,மகாராஜா படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் மற்றும் பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் ஆகியோர் கதைகள் கூறினார்கள். இந்த மூவரில் ஒருவர்தான் இயக்குநராக இருப்பார் என்று பேசப்பட்டது.

இந்நிலையில், இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பினை சனவரி 3,2026 அன்று காலை 11 மணியளவில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.அதில்,டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குநராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என சொல்லப்பட்டது.

ஆனால், இப்போது திடீரென அப்படத்திலிருந்து இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தியை நீக்கிவிட்டு வேறொருவரை இயக்குநராக்கியிருப்பதாகத் தகவல் பரவியது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் விசாரித்தால்?

இயக்குநர் மாற்றம் என்பதில் எந்த உண்மையும் இல்லை. அவர்தான் இயக்குகிறார். அந்நதப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பே பெரிய அரங்கம் அமைத்து அதில் நடைபெறவிருக்குறது.அந்த செட் அமைக்கும் வேலைகள் தொடங்கிவிட்டன.
இன்னொரு பக்கம் திரைக்கதையை மேலும் செம்மைப்படுத்துவது படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு ஆகிய வேலைகளில் இயக்குநர் கவனம் செலுத்தி வருகிறார்.

ரஜினி சார், ஜெயிலர் 2 படப்பிடிப்பை முழுமையாக முடித்த பிறகு எங்களுக்குத் தேதிகள் கொடுப்பார்.அவர் சொல்லும் தேதிகளில் படப்பிடிப்பு நடத்துகிற மாதிரி நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

Related Posts