ஸ்ரீதேவி வீட்டுக்கு அஜித் சென்றதற்குக் காரணம் இதுதான்
பிப்ரவரி 24,2018 ஆம் நாள் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் 16 ஆம் நாள் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் நேற்று (மார்ச் 11) அன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். அவர்களோடு நடிகர் அஜித்குமார், மனைவி ஷாலினியுடன் ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்று அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
நேற்று, நடிகர்சங்கம் சார்பில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது. மாலையில் நட்சத்திரவிடுதியொன்றில் திரையுலகினர் திரளாகக் கலந்துகொண்ட அஞ்சலிக் கூட்டமும் நடந்தது.
இவ்விரண்டு இடங்களிலும் கலந்து கொள்ளாமல் ஸ்ரீதேவி வீட்டுக்கு அஜித் சென்றதற்கு அஞ்சலி செலுத்துவதைத் தாண்டி இன்னொரு காரணமும் இருக்கிறது என்கிறார்கள்.
ஸ்ரீதேவி மரணத்துக்கு முன்பே பேசியபடி, போனிகபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.
அதனால் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகவே ஸ்ரீதேவி வீட்டுக்கு அஜித் சென்றார் என்று சொல்லப்படுகிறது.











