சினிமா செய்திகள்

இலண்டன் பெண்ணை ஏமாற்றினாரா விஷால் நண்பர் ? – பரபரக்கும் சிக்கல்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் துப்பறிவாளன் 2.விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

இப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு இலண்டனில் நடந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பு 2019 டிசம்பர் இறுதியில் நிறைவடைந்தது.

படப்பிடிப்பை முடித்துவிட்டு விஷால் உள்ளிட்டோர் உடனே கிளம்பிவிட படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஙர்கள் கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டதாம்.

அதற்குக் காரணம், அங்கு படப்பிடிப்பு நடத்திய வகையில் கொடுக்க வேண்டிய பணத்தை முழுமையாகக் கொடுக்காததால் சிலர் அங்கேயே இருக்க வேண்டிய சூழல்.

ஒரு வாரத்துக்குப் பின் எல்லாவற்றையும் கொடுத்து அங்கிருந்தவர்களை சென்னை அழைத்துவந்துவிட்டனர்.
அந்த குளறுபடிக்கெல்லாம் விஷாலின் நம்பிக்கைக்குரிய நண்பர் ரமணாதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அவர் நிர்வாகத்தில் படப்பிடிப்பு வேலைகள் நடந்ததால் பல குழப்பங்கள் நேர்ந்தன என்கிறார்கள். உள்ளூர் படப்பிடிப்பு நிர்வாகிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தன் போக்குக்கு பல முடிவுகளை ரமணா எடுத்தார் என்கிறார்கள். இதனால் படப்பிடிப்பிலும் பல சிக்கல்கள் நேர்ந்தனவாம்.

இவை எல்லாவற்றையும் விட படப்பிடிப்புக்குப் போன இடத்தில் இலண்டனைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்பாகப் பழகினாராம் ரமணா. அப்பெண்ணைத் திருமணம் செய்வதாகக்கூடச் சொன்னாராம்.
ஆனால் படப்பிடிப்பு முடிந்தவுடன் எதுவும் சொல்லாமல் ரமணா புறப்பட செய்தியறிந்த அந்தப் பெண் பெரிய தகராறு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒருவழியாகச் சமாளித்து வந்துவிட்டாராம் ரமணா. ஆனால் அந்தச் சிக்கல் விடாமல் தொடருகிறதாம். என்னவாகுமோ தெரியவில்லை என்கிறார்கள் விசயமறிந்தவர்கள்.

Related Posts