சினிமா செய்திகள்

அன்பா சொல்லுங்க ஏமாத்தாதீங்க – சூர்யா ரசிகர்கள் கோபம்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தடைபட்டது.

மீண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க படக்குழு ஆயுத்தமாகி வருகிறது. அதுவே இறுதிக்கட்டப் படப்பிடிப்பாக இருக்கும் என்றும், டிசம்பர் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அவ்வப்போது சூர்யா ரசிகர்கள், அடுத்த ‘என்.ஜி.கே’ அப்டேட் என்று படக்குழுவினரிடம் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

இது தொடர்பாக இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மனமார்ந்த வேண்டுகோள். நாங்கள் அமைதியாக, கடுமையாக உழைத்து வருகிறோம். அப்டேட்டுகள் சரியான நேரத்தில் வரும். மூன்று நாளைக்கு ஒரு முறையோ, வாரா வாரமோ வராது.. எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த டவீட்டுக்குப் பின்னால், இப்படியே பலமுறை சொல்லீட்டிங்க என்கிற விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் படம் சிறப்பாக வந்தால் போதும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அதேசமயம், இப்படி குணமா சொன்னா கேட்டுக்குவோம், ஆனா தயாரிப்பாளர் இதோ அதோன்னு ஏமாத்துறார் என்று பலர்் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.

Related Posts