விக்ரம்பிரபு செய்த செயலால் வெளிப்பட்ட செய்தி
தமிழின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று‘பொன்னியின் செல்வன்’.இந்நாவலை திரைப்படமாக எடுக்கிறார் மணிரத்னம் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடித்தார்கள்.
ஒரு பேட்டியின்போது விக்ரம்பிரபுவிடம், இந்தப் படத்தில் நெகடிவ் ரோல் தான் நடிக்கிறீங்களா? என்று தொகுப்பாளர் கேட்க. அதற்குப் பதிலளித்த நடிகர் விக்ரம் பிரபு “இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்” என்று மழுப்பலாகப் பதிலளித்தார். இப்படத்தில் எனக்கு தெரிந்த வரை 27 பேர் நடித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும்வரை வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நடிகர்களை ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இப்படத்துக்காக நீளமாக முடி வளர்த்திருந்த விக்ரம்பிரபு இப்போது தனது சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.புதிய படமொன்றில் நடிப்பதற்காக அவர் இப்படிச் செய்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கால வரையறையற்றுத் தள்ளிப்போயிருப்பது தெரியவருகிறது என்கிறார்கள்.
ஒரு நடிகர் முடிவெட்டினால் கூட எவ்வளவு சிக்கல்கள் பாருங்கள்?












