ஜோதிகா பேசியது என்ன? – சர்ச்சையும் விளக்கமும்
அண்மையில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா, “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்” என்று பேசியதாகச் செய்திகள் வெளீயாகின.
அதனால் சமூக வலைதளங்களில் அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஜோதிகா பேசியது இதுதான் என்று சமூகவலைதளங்களில் உலாவரும் பதிவொன்றில்….
அவர் பேசியது பின்வருமாறு…..
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் அவ்வளவு அழகா இருக்கும்,போய்ப் பாருங்க என்று சொன்னார்கள்.. அன்று எனக்கு அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு இருந்தது..
அங்கே நான் கண்டதை வாயால் சொல்ல முடியாது.. அவ்வளவு மோசமாக பராமரிப்பு இருந்தது..
அன்று நான் மருத்துவமனையை பார்த்து விட்டு கோவிலுக்குச் செல்லவில்லை..
கோவிலைப் பராமரிக்க இலட்சக்கணக்கில் செலவு பண்றீங்க கோவில் உண்டியலில் காசு போடுறீங்க..
என்னுடைய வேண்டுகோள்
அதே அளவு பணத்தை அரசுப் பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் கொடுங்கள் என்பது மட்டுமே.
இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.
இதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. கோவிலுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மருத்துவமனை பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்பதே அவரது பேச்சின் சாராம்சமாக இருக்கிறது.அதில் தவறில்லை.
இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டிருக்கிறது.











