சினிமா செய்திகள்

தர்பார் நட்டம் ரஜினி மறுப்பு களத்தில் டி.ராஜேந்தர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த படம் தர்பார். இப்படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது.

பொங்கல் திருநாளையொட்டி இப்படம் வெளியானதால் சுமார் பத்து நாட்கள் விடுமுறை இருந்ததென்பதால் நல்ல வசூல் கிடைக்கும் என்று நம்பி பெரும்தொகை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட்டார்கள் விநியோகஸ்தர்கள்.

ஆனால், எல்லாப் பகுதிகளிலும் படத்துக்கு நட்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் பல கோடிகள் நட்டம் என்பதால் படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது, படத்தை வெளீயிடும்போதே நட்டத்தில்தான் வெளீயிட்டோம். அதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஒதுங்கிக் கொண்டார்களாம்.

சட்டப்படி எதுவும் செய்யமுடியாத நிலையில் தார்மீக அடிப்படையில் ரஜினியிடமும் ஏ.ஆர்.முருகதாஸிடமும் இதுபற்றி முறையிட முடிவு செய்த விநியோகஸ்தர்கள் இருநாட்களுக்கு முன்பாக ரஜினி வீட்டுக்கும் முருகதாஸ் அலுவலகத்துக்கும் சென்றனர்.

அப்போது ரஜினி தரப்பிலிருந்து ரஜினி உங்களை அழைப்பார் என்று சொல்லியனுப்பிவிட்டார்களாம்.

ஆனால், அடுத்தநாள் ரஜினி தரப்பை தொடர்பு கொண்டபோது, இது தொடர்பாக ரஜினி உங்களைச் சந்திக்கமாட்டார் என்று சொல்லிவிட்டார்களாம்.

இதனால் விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இந்த விசயம் குறித்துப் பேச கூட்டம் நடந்ததாம். 

டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், ரஜினி படம் என்பதால் மட்டுமே இவ்வளவு பணம் கொடுத்தோம் ஆனால் நட்டமாகிவிட்டது, தயாரிப்பு நிறுவனமோ ரஜினிக்கு 100 கோடி முருகதாஸுக்கு 35 கோடி கொடுத்ததால்தான் செலவு அதிகம். 
அதனால்தான் நட்டமும் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள். எனவே அவர்கள் இருவரும் இதர்கு தார்மீக ரீதியாகப் பொறுப்பேற்று ஏதவது ஒரு தீர்வு காணவேண்டும் என்று தீர்மானித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

முதல்கட்டமாக அவர்களைச் சந்திப்பது, சந்திக்க மறுத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என முடிவெடுத்திருக்கிறார்களாம்.
இந்தச் சிக்கல் தனிப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து சங்கத்துக்குச் சென்றுள்ளதால் மேலும் பெரிதாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts