சினிமா செய்திகள்

ஒப்புக் கொண்ட கெளதம் மேனன் – வியப்பில் படக்குழு

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க, அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் தயாராகியிருக்கும் “ஓ மை கடவுளே” படம் இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது.

வாணி போஜன், எம்.எஸ். பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசை லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவு விது அயன்னா,படத்தொகுப்பு பூபதி செல்வராஜ் ,கலை இயக்கம் இராமலிங்கம், உடை வடிவமைப்பு தினேஷ் மனோகரன்,சண்டைப் பயிற்சி ராம்குமார், பாடல்கள் கோ சேஷா.

இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்புப் பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.

இதுபற்றி தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு கூறியதாவது…

இப்படத்தில் சில காட்சித்தொடர்கள் படப்பிடிப்புத் தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அந்தக்காட்சிகளில் உண்மையான இயக்குநர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்க வேண்டும் காதல் படங்கள் இயக்குபவராக இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சின் போது அனைவரது தேர்வாகவும் கௌதம் மேனன் இருந்தார். அவர் ஒப்புக்கொள்வாரா ? எனும் தயக்கம் எங்களிடம் இருந்தது.

ஆனால் இயக்குநர் அவரை அணுகி கதையையும், அவரது பாத்திரம் குறித்தும் கூறிய போது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். மேலும் வெகு எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் இருந்து நடித்துத் தந்தார். அவரது காட்சிகளை இப்போது காணும்போது வெகு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களும் பெரு விருந்து காத்திருக்கிறது.

இப்படம் இளைஞர்களைக் கவரும் அட்டகாசமான காதல் படமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் தணிக்கையில் யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

Related Posts