சூர்யா விஜய்க்கு உள்ள உணர்வு நயன்தாராவுக்கு இல்லையா?
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் வெள்ளத்தில் சிக்கி ஒட்டுமொத்த கேரளாவும் தவித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கேரளாவிருந்து வந்த நடிகை நயன்தாரா நடித்த படம் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகவிருக்கிறது.
இந்தப்படத்தின் விளம்பரப் பாடலில் நடிப்பது தொலைக்காட்சிகளில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது, அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வது என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
சொந்த மாநில மக்கள் சோகத்தில் தத்தளிக்க இவர் இங்கே உற்சாகமாகப் படம் பார்க்க எல்லோரையும் அழைக்கிறார். அது மட்டுமின்றி சூர்யா, விஜய் போன்று தமிழ் நடிகர்களே கேரள வெள்ள நிவாரணத்துக்கு உதவுகிறார்கள்.
கோடிகளில் சம்பாதிக்கும் இவர் தம் மாநில மக்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்கிற விமர்சனங்கள் வருகின்றன.











