பிகில் படத்தின் தமிழக வியாபாரம் – வாய் பிளக்கும் திரையுலகம்

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கும் படம் பிகில்.
இப்படம் அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி நாளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்கிரீன்சீன் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழக உரிமை சுமார் எழுபது கோடி என்று சொல்லப்படுகிறது.
இதுவே பெரிய விலை என்று எல்லோரும் வியந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்நிறுவனம், தமிழக விநியோகஸ்தர்களுக்கு இப்படத்தை விற்ற வகையில் சுமார் பத்து கோடி இலாபம் சம்பாதித்திருக்கிறதென்கிறார்கள்.
ஓரிரு நாட்களுக்கு முன் இப்பட வியாபாரம் தொடங்கியது தொடங்கிய வேகத்தில் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
அதுபற்றிய உத்தேச விவரம்…
மதுரை —— 11.20 கோடி
திருச்சி 9 கோடி
கோவை 13 கோடி
சேலம் 7 கோடி
நெல்லை 5 கோடி
செங்கல்பட்டு 16 கோடி
சென்னை 8 கோடி
நார்த் சவுத் 11 கோடி
ஆக மொத்தம் இப்படம் சுமார் எண்பது கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம்.இதனால் திரையுலகம் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறது.