நாக் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு விருது – உரிமையாளர் மகிழ்ச்சி
திரைத்துறையில் போஸ்ட் புரொடக்ஷன் எனும் படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளான டப்பிங் (குரல்பதிவு) உள்ளிட்ட எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்து தருகிற நிறுவனமாக நாக் ஸ்டுடியோஸ் நிறுவனம் விளங்குகிறது.
இம்மாதத்தோடு (ஜுன் 2019) இந்நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகின்றன.
ரஜினி முதல் அத்தனை முன்னணி நடிகர்களும் இந்த ஸ்டுடியோவுக்கு வந்து டப்பிங் பேசியிருக்கின்றனர்.
குறுகிய காலத்திலேயே பெரும் வளர்ச்சி பெறக் காரணம் இதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருக்கும் கல்யாணம்தான்.
இந்நிறுவனத்தின் பணிகளுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக,
இந்தாண்டிற்கான சிறந்த போஸ்ட் ப்ரோடுக்ஷன்-க்கான இந்தியன் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அகாடமி விருது (Studio Of The Year – Post Production) Knack ஸ்டூடியோஸ்-க்கு கிடைத்துள்ளது.
அதைப்பற்றி அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த ராமானுஜம் கூறியதாவது:-
இந்த வெற்றிக்குக் காரணமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவால் தான் எங்களுக்கு இந்த விருது கிடைத்தது. இதேபோல் நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து இன்னும் பல விருதுகளை அடைவோம்
இவ்வாறு அவர் கூறினார்.










