சினிமா செய்திகள்

ஆர்யா விற்றுக்கொடுத்த சந்தானம் படம் – பெரியவிலையால் படக்குழு மகிழ்ச்சி

சந்தானம் நடிக்கும் சபாபதி திரைப்படத்தை இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் இயக்கிவருகிறார்.

தந்தை – மகன் பாசத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தை ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 22 ஆம் தேதி கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தினர்.

சனவரி 21,2021 அன்று சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பெயரையும் முதல்பார்வையையும் படக்குழு வெளீயிட்டது.

அந்தப்படம் முழுமையாகத் தயாராகியிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம். அதற்காக அத்தொலைக்காட்சி கொடுத்திருக்கும் தொகை சுமார் நான்கு கோடி என்று சொல்லப்படுகிறது.

சந்தானம் படம் இவ்வளவு விலைக்கு விற்றிருப்பதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தப்படம் கலர்ஸ் தொலைக்காட்சிக்குப் போனதற்கும் இவ்வளவு விலை கிடைத்ததற்கும் முக்கிய காரணம் நடிகர் ஆர்யாதானாம். அவர்தான் கலர்ஸ் தொலைக்காட்சியோடு தமக்குள்ள உறவைப் பயன்படுத்தி இப்படத்துக்கு உதவினார் என்று சொல்கிறார்கள்.

Related Posts