இந்திநடிகர் அமீர்கான் மூன்றாவது திருமணம் – மகளாக நடித்தவரை மணக்கிறார்
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் அண்மையில் (ஜூலை 3,2021) தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். இருவரும் இணைந்து கூட்டறிக்கையும் வெளீயிட்டனர்.
அப்போதிருந்து,ஐதராபாத்தைச் சேர்ந்த தங்கல் பட நடிகை பாத்திமா சனா ஷேக்கை மூன்றாவதாவதாக அவர் திருமணம் செய்ய உள்ளதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமீர்கான் தனது முதல் மனைவியான ரீனா தத்தாவை 2002 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஜூனைத் என்கிற மகனும், ஈரா என்கிற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் தனது லகான் இந்திப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரண் ராவை 2005 ஆம் ஆண்டு திருமணம்செய்துகொண்டார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கிரண் ராவை விவாகரத்து செய்துள்ளார்.
இவர்களின் இந்த முடிவுக்குக் காரணம், தங்கல் படத்தில் அமிர்கானின் மகளாக நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக் என இந்தித்திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகின்றது. வட இந்திய ஊடகங்களிலும் தகவல்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன.
நடிகை பாத்திமா சனா ஷேக், ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அதன் பின்னர் மும்பைக்குச் சென்று சில திரைப்படங்களில் நடித்தார். பின்னர் தங்கல் படத்தில் அமிர் கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னரும் இருவரும் பல விருந்துகளில் பங்கேற்று உள்ளனர்.
இவரைத்தான் அமீர்கான் மூன்றாவதாகத் திருமணம் செய்ய உள்ளார் எனச் சொல்லப்படுகிறது.
56 வயதாகும் நடிகர் அமீர்கான், 29 வயதுள்ள பாத்திமா சனா ஷேக்கை திருமணம் செய்யவிருக்கிறார் என்கிற தகவல் பல நாட்களாக ஊடங்கங்களில் வெளிவந்துகொண்ஃபிருக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள் அதுகுறித்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருப்பதே அது உண்மை என்பதற்குச் சான்று என்கிறார்கள்.
பார்க்கலாம்.












