அடுத்த படத்துக்காக ஹிப்ஹாப் தமிழா ஆதி கேட்கும் தொகை – அதிர்ந்த தயாரிப்பு நிறுவனம்
மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார்.இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு ஆதி இயக்கும் படம் இது. இதில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடிக்கிறார்.
அஸ்வின்ராம் என்பவர் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இவ்விரு படங்களும் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்கிறார்கள்.
இந்நிலையில், இப்படங்களுக்கடுத்து இன்னொரு படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றனவாம். ஆதியே இயக்கி நடிக்கும் அந்தப்படத்தை முன்னாள் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தினர் தயாரிக்கவிருக்கிறார்களாம்.
அந்தப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் ஹிப்ஹாப்தமிழா ஆதியையே தயாரித்துத் தரச் சொல்கிறார்களாம். அதேசமயம் அதற்காக ஆதி கேட்கும் தொகை தயாரிப்பு நிறுவனத்தை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம்.
அவர் கேட்ட தொகை பத்து கோடி என்று சொல்லப்படுகிறது.
இது மிகவும் அதிகம் என்று தயாரிப்புத்தரப்பு நினைக்கிறதாம். இதனால் இதைக்குறைக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகவும் அது நிறைவடைந்தவுடன் அறிவிப்பு வரும் என்றும் சொல்கிறார்கள்.











