அஜித் பற்றிய கருத்து – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது வெளிநாட்டில் திரைத்துறை படிப்பை படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக சஞ்சய்யின் பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன.
அதில், அவரைப் பின்தொடருபவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டு வந்தது.
குறிப்பாக நடிகர் அஜித் பற்றிய கேள்விகள் சஞ்சயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்கப்பட்டது. அதற்கு விஜய் மகனும், தல அஜித் என்றாலே மாஸ் தான் போன்ற பதிவுகள் வெளியாகின.
அஜித்தைப் புகழ்ந்த விஜய் மகன் என்கிற செய்தி வேகமாகப் பரவியது. இதையடுத்து, சஞ்சய் பெயரில் இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கமும் பரவத் தொடங்கியது.இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் இருதரப்பினரிடையே பெரும் சர்ச்சை உருவாகவிருந்த நிலையில், அது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் இல்லை என்றும் விஜய்யின் மகன், மகள் இருவரும் எந்த ஒரு சமூகவலைதளங்களிலும் பங்கேற்பது இல்லை என்றும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விஜய் தரப்பு வெளியிட்டுள்ள குறிப்பில்,
சமீபகாலத்தில் தளப்தி விஜய் அவர்களின் மகனான சஞ்சய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருப்பதாகவும் அதில் அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருவதாகவும் கூறி வருகின்றனர். மேலும் அந்தப் பதிவுகள் சமூகவலைதளங்களில் பரவலாகப் பரவிவருகிறது. இதனை யாரும் நம்பவேண்டாம். தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் மகள் திவ்யாசாஷா இருவருமே எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை.தயவுசெய்து தளபதி விஜய் ரசிகர்கள் யாரும் இந்த போலி கணக்குகளுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.











